அன்பின் ஆழம் கண்டேன் கையை இறுக பிடித்திருக்கையில், உடையின் எளிமை கண்டேன் துப்பட்டா அணிகையில், நீளத்தின் அழகை கண்டேன் அவள் கூந்தலில், இயற்கையின் அழகை கண்டேன் குடையாய் இருக்கையில் அவளுக்கு (மரம்), அலங்கார அலட்டலில்லா அழகியவளை..! வர்ணிக்க வார்த்தைகளில்லா வரிகளாய் நின்றாள் கண் முன், புகைப்படத்தில்..!! அவளை அறிவேன்.! பெயர் ? தெரியாது…
-ஸ்ரீதர்