உடைப்பெடுத்த ஆற்றைப்
போல்,
பீறிட்டு எழுபவன்
அவன்..!
வரிகள் எல்லாம் அதன்
தோலாக,
தோலெல்லாம் அதன்
வரிகளாக,
நெளிந்து நெளிந்து
சீறிக் கொண்டே
இருப்பான்..!
எம்வீட்டு விருந்தாளியாய்
இன்று அவன்,
குறையில்லா உபசரிப்புடன்
வழியனுப்பப் பட்டான்..!!
– ஸ்ரீதர்