வேகாத வெயிலில் கஷ்டப் படுகிறாள்
100 க்கும், 200 க்கும்,
உடல் நலம் சரியில்லாத
நிலையிலும்,
அவள் வருமானம் ஒன்றே அந்த
குடும்பத்திற்கு,
அதிலும் பாதி பிடுங்க படுகிறது
வலுக்கட்டாயமாக குடிப்பதற்கு (கணவன்),
அவள் என்செய்வாள் மீதியை வைத்து
மூன்று பிள்ளைகளுக்கு (உணவு),
இதில் இவன் வாங்கிய கடன்கள்
வேறு (குடிப்பதற்கு) வீட்டு வாசலில்,
அவள் என் செய்வாள்..?
பிள்ளைகள் தான் என் செய்யும்..?
அவள் வேதனையை அறிவாள்
அவள் மட்டுமே..!!!