முடிவுகள் எடுத்த பிறகே,
இங்கு ஆலோசனை
கேட்கப்படுகிறது;
அவள் ஆசைகள் (ம)
கனவுகள் என்னவென்று
கேட்க கூட அவர்கள்
தயாராக இல்லை,(பெற்றோர்)
அவள் அங்கு சிலை போல்
நின்று கொண்டிருக்கிறாள்
மற்றவர்கள் (கையில் தேநீருடன்)
ரசிப்பதற்கு மட்டும்..!
வாழ்க்கையை வாழ்வது யார்
அவர்களா? அவளா?..