அவன் உருவத்தில் சிறியவன் ஆனால்,
ஒழுக்கத்தில் சிறந்தவன்..!
அவன் யாருக்கும் அஞ்சி நான் பார்த்ததில்லை,
பயம் என்னவென்றே அறியாதவன்..!
அவன் நடை எப்பொழுதும் கம்பீரமாய் இருக்கும்,
அவன் வழியில் யார் குறுக்கிட்டாலும் ச்சீ போ
என்று சொல்வான்,
அவன் வீடு எப்பொழுதும் உறவினர்களால் நிரம்பி
வழியும்..!
இவன் நம் வீட்டிற்கு தினமும் விருந்தாளியாக வந்து செல்வான்..!
அவனுக்கு நாம் வைத்த பெயர்தான் “கடத்தல் மன்னன்”..!!
Erumbu kavithai in Tamil
