மனம் கலங்கி
யாருமில்லா சாலையில்
நெடுந்தூரம் சென்று
கொண்டிருந்தேன்..!
தனிமையில்,
அலைபேசியை
அணைத்த படி..!
பறவைகள்,மரங்கள் யார்
கேட்டும் சொல்லவில்லை
காரணம்..?
யானைகள் வழிமறித்து
கூட கேட்டன.. சொல்லவில்லை
காரணம்..?
மேகக்கூட்டங்கள் என் துயரத்தை பார்க்க முடியாமல் அழுது கொண்டே இருந்தன
உளறி விட்டேன் நானும் அழுகையுடன்..!!
– ஸ்ரீதர்